Monday, March 12, 2012

மாற்று வலுவுள்ளோருக்கு ஜனாதிபதியின் பாரியார் 'சிறிலிய சவிய” திட்டத்தின் கீழ் உதவி



சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் கட்டானை நயனாலோக்க கிராமத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்றகாக ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ இன்று நீர்கொழும்பு - கட்டானைக்கு விஜயம் செய்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சனி பெர்னாந்து பிள்ளையின் அழைப்பை ஏற்றே அவர் அங்கு விஜயம் செய்தார்.

ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷவின் கருத்திட்டத்தில் உருவான 'சிறிலிய சவிய' திட்த்தின் கீழ் நயனாலோக்க கிராமத்தில் வசிக்கும் கண் பார்வையற்ற 70 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் . வலது குறைந்த மற்றும் கண் பார்வையற்றவர்களுக்கு  சக்கர நாற்காலிகள் ஊன்று கோல்கள் என்பன  அங்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சனி பெர்னாந்துபிள்ளை சர்தேச புகழ்பெற்ற இலங்கையின் முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க மற்றும் பிரதேச அரசியல் தலைவர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கண் பார்வையற்றவர்களின் பாடல் நிகழ்சியும் அங்கு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.















No comments:

Post a Comment