Wednesday, April 4, 2012

கலாநெஞ்சன் ஷாஜஹான் கல்விமாணி பட்டம் பெற்றார்

நீர்கொழும்பைச் சேர்ந்த கவிஞரும் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கலாநெஞ்சன் ஷாஜஹான் கல்விமாணி பட்டம்   (B.Ed) பெற்றார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (3-4-2012) கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற
தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டமளிப்பு விழாவின் போதே  இவருக்கு கல்விமாணி பட்டம் வழங்கப்பட்டது.

ஜனாப் ஷாஜஹான் தேசிய கல்வி நிறுவகத்தில் 2004/2006 ஆம் கல்வியாண்டில் கல்விமாணி பட்டப் பாநெறியை பூர்த்தி செய்திருந்தார்.தற்போது இவர் கல்வி முதுமாணி பட்டப் பாநெறியை தேசிய கல்வி நிறுவகத்தில் தொடர்ந்து வருகிறார்.

இவர், ஏற்கனவே கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் டிப்ளோமாவும். மனித உரிமைகள் நிலையத்தில் மனித உரிமைகள் தொடர்பான டிப்ளோமாவும் பெற்றுள்ளார்.

   இலங்கை அதிபர் சேவையை  (தரம் 2-11 ) சேர்ந்த  உத்தியோகத்தருமாவார். சமாதான நிதவானாகவும் உள்ளார்.

       லை இலக்கியத் துறையில் நீண்டகாலமாக ஈடுபட்டு வரும் கலாநெஞ்சன் ஷாஜஹான் இரண்டு கவிதை தொகுதிகளையும், இரண்டு இஸ்லாமிய கீதங்கள் பாடல் தொகுதிகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
அண்மையில் இவர் அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் சாமஸ்ரீ தேச கீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment